அரசுக் கல்லூரி விடுதிகளில் அடிப்படை வசதிகள் - இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை!

அரசுக் கல்லூரி விடுதிகளில் அடிப்படை வசதிகள் - இந்திய மாணவர் சங்கம்  கோரிக்கை!

இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை!

அரசுக் கல்லூரி விடுதிகளில் அடிப்படை வசதிகள் கோரி இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை, பிப்.22:- அரசு கல்லூரி விடுதிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரிக்கான ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவர் நலவிடுதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் நல விடுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடுகள் நடைபெற்றது. மாநாடுகளில் கலந்துகொண்டு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன், துணைத் தலைவர் இரா.வசந்தகுமார், துணைச் செயலாளர் அ.பாலாஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆதிதிராவிடர் மாணவர் நலவிடுதியின் கிளைத் தலைவராக துருதேஸ் செயலாளராக தனுஸ் பிற்படுத்தப்பட்ட மாணவர் நலவிடுதியின் கிளைத் தலைவாராக சுரஷ் செயலாளராக கலைவாணன், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் நல விடுதியின் கிளைத் தலைவராக மோகன்ராஜ், செயலாளராக ஸ்டிவன்சன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேற்கண்ட மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்குவதோடு, கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். தரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story