பிப்., 1 முதல் 6 கோடி பேருக்கு அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி
பைல் படம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், ஆத்துாரில், இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் அபுல்ஹாசன், நமது நிருபரிடம் கூறியதாவது:இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள, 40 ஆயிரம் மருத்துவர்கள் மூலமாக பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் வரும் பிப்., 1 முதல், தமிழக மக்களுக்கு அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.
வீட்டில் திடீரென மயங்கி விழுபவர்களுக்கு,இருதயத்தை தொடர்ந்து துடிக்க வைத்து, உயிரிழப்பை தடுக்கும் வகையிலான சில அடிப்படை பயிற்சிகள், கடந்த, டிச., 10 முதல் வழங்கப்படுகிறது. ஆறு கோடி பேருக்கு இப்பயிற்சிவழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின்துவக்கி வைக்க உள்ளார்.தமிழக அளவில், 500க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளனர்.
தேசிய அளவில் கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டம் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில், 120 மருத்துவர்கள் இறந்தனர். இந்தியா முழுவதும், 1,720 மருத் துவர்கள் இறந்துள்ளனர். மத்திய அரசிடம் மருத்துவ கல்வியும், மாநில அரசிடம் மருத்துவ சேவையும் உள்ளது. 'நீட்' தேர்வை முழு மையாக எதிர்க்கவில்லை. தமிழகத்தில், 'நீட்' தேர்வு விலக்கை, தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு கூறினார்.