கன்னியாகுமரியில் கடலில் இறங்க 5-ம் நாளாக தடை

கன்னியாகுமரியில் கடலில் இறங்க 5-ம் நாளாக தடை
கடல் சீற்றம்
குமரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதனால், கடந்த 4ஆம் தேதி குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்றும் கடல் சீற்றம் நீடித்தே வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இறங்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து வருகிறது. இந்த தடையால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் இறங்கி குளிப்பது வழக்கம். மேலும் கடற்கரையில் நின்று சூரியன் உதயம் பார்ப்பது உண்டு. ஆனால் தற்போது அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் கடலுக்குள் இறங்கிடாத வகையில் அங்கு கயிறு கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் இறங்கச் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகின்றனர். அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சுற்றுலா போலீசார் எச்சரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story