கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதை தொடர்ந்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்த நிலையில் கடந்த எட்டு நாட்களாக குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் அருவியின் நீர் வரத்து சீரானதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்

Tags

Next Story