திற்பரப்பு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை

திற்பரப்பு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை

திற்பரப்பு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை

கனமழை பெய்து வருவதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது
குமரி மாவட்டத்தில் கடந்த தினம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story