குமரி : திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை
கனமழையால் அருவியின் நீர் வரத்து அதிகரித்துள்ளது
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படுவது திற்பரப்பு நீர்வீழ்ச்சி . இங்குள்ள அருவியில் நீராட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இன்று விடுமுறை நாள் ஆனதால் அதிக பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கன மழையால், கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Next Story