ராமலிங்க மூர்த்தி ஆலயத்தில் கூட்டமாக வாழும் வவ்வால்கள்
கோடந்தூர் ஊராட்சி ராஜலிங்க மூர்த்தி ஆலயத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட கோடந்தூர் ஊராட்சியில் பழமையான அருள்மிகு ராஜலிங்க மூர்த்தி எனும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திலும் கோவில் சுற்றுப்புறத்திலும் உள்ள மரங்களில் வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக சுமார் 1000 வவ்வாலுக்கு மேலாக வாழ்ந்து வருகிறது. இந்த வவ்வால்கள் அனைத்தும் பகலிலே தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பதை அந்த கோவிலுக்கு வரும் யாத்ரீகர்கள், பக்தர்கள் ஆச்சரியமாக பார்ப்பது உண்டு. பொதுவாக வவ்வால்கள் சூரியன் மறைவுக்கு பிறகு இறை தேட சென்று விடும். சுற்று வட்டார பகுதியில் உள்ள மரங்களில் உள்ள பழங்களை உண்டு அதிகாலையில் மீண்டும் அந்த மரத்தில் வந்து தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும். வவ்வால்கள் பெரும்பாலும் மனிதர்கள் வசிக்காத, அல்லது போதிய வெளிச்சமும், மனித நடமாட்டம் இல்லாத வீடுகளிலும், கோவில்களிலும் வசிக்கும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வவ்வால்கள் இதுபோன்று வாழ்க்கை நடத்துவதால், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி உள்ளிட்ட எந்த விசேட காலங்களிலும் பட்டாசுகளை வெடிப்பதில்லை என்பதும் கூடுதல் தகவலாகும்.
Next Story