உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் வசதி
உதகை தாவரவியல் பூங்கா நிர்வாகம் 8 பேர் வரை அமர்ந்து பயணிக்க கூடிய பேட்டரி கார் சேவையை துவங்கியுள்ளது.
சர்வதேச புகழ்பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை கண்டுகளிக்க தமிழகம் மற்றும் வெளி மாநிலம் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த அரசு தவரவியல் பூங்காவை கண்டு ரசித்து செல்வார்கள். குறிப்பாக கோடை சீசன் ஏப்ரல் மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இந்த சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து, 60 வகைகளில் பல்வேறு வகையான 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தி காட்சிக்காக வைக்கப்படுகிறது. குறிப்பாக தற்போது, இரண்டாவது சீசன் கலைக்கட்ட துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாவரவியல் பூங்கா நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி 8 பேர் வரை அமர்ந்து பயணிக்க கூடிய பேட்டரி கார் சேவையை துவக்கியுள்ளது. இதற்காக தலா ஒருவருக்கு 30 ரூபாய் வசூசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 ராட்சத பேட்டரிகள் கொண்டு இயக்கப்படும் இந்தப் பேட்டரி கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் இயக்க முடியும்.
Next Story