ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம் !

ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம் !

பேட்டரி கார் சேவை 

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தலா ஒரு கி.மீ. நீளம் கொண்ட 2 பிளாட்பாரங்கள் உள்ளன. இதனால் முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகள் தண்டவாளத்தை கடந்தும், நடைமேடை வழியாகவும் செல்லும் நிலை உள்ளது.

இதனால் பயணிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதை தொடர்ந்து பயணிகள் வசதிக்காக பேட்டரி கார், லிப்ட் வசதிகள் செய்து தரக்கோரி அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்த ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 3 டிரைவர்கள் சுழற்சி முறையில் இந்த பேட்டரி கார்களை இயக்கி வருகின்றனர். மேலும் நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிவரை பேட்டரி ஜார்ஜ் ஏற்றும் பணிக்காக இயங்காது. பேட்டரி கார் இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story