தனியார் நிறுவனத்தில் பேட்டரி திருட்டு - 4 பேர் கைது

தனியார் நிறுவனத்தில் பேட்டரி திருட்டு - 4 பேர் கைது

காவல் நிலையம் 

கரூர் டெக்ஸ் பார்க் அருகே தனியார் நிறுவனத்தில் 24 பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், அழகாபுரி, வடவீரரங்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 40. இவர் கரூரில் டெக்ஸ் பார்க் அருகே செயல்படும், எவர்கிரீன் இண்டஸ்ட் டவர் கம்பெனியில் ரோந்து அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜனவரி 27ஆம் தேதி கரூரில் அவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 2- மணியில் இருந்து 3- மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு எச்சரிக்கை செய்யும் அலாரம் குறுந்தகவலாக ஒன்று வந்துள்ளது. தகவலை பார்த்தவுடன் தங்களது நிறுவனத்தில் பொறுத்தி இருந்த அலாரத்தின் தகவல் என்பதை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

அப்போது, அடையாளம் தெரியாத நான்கு பேர் அவரது நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கூண்டின் பூட்டை உடைத்து அங்கு வைத்திருந்த 24 பேட்டரிகளை களவாடி சென்றதை அறிந்தார். எனவே, இது குறித்து அரவக்குறிச்சி காவல் அலுவலகத்தில், ரோந்து அதிகாரி ரமேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம்,பள்ளப்பட்டி, சா நகர் அருகிலுள்ள செல் ஆசியா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் தமீம் அன்சாரி, பள்ளப்பட்டி சாநகர் அருகே உள்ள புது அபூபக்கர் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மொய்தீன் கான், சாதிக்‌ ஷா, பள்ளப்பட்டி, பெரிய ஓடை தெருவை சேர்ந்த ஹைதர் அலி ஆகிய நான்கு பேர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story