BDO மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

X
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு திட்டத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட பயனர்கள் தேர்வு செய்துள்ளனர். மக்கள் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் பயனாளிகளிடம் 15 ஊராட்சிகளிலும் பயனாளிகளிடம் 10,000 முதல் 20 ஆயிரம் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு வீடு கட்டுவதற்கான அனுமதி பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு ரூபாய் கூட பெறக்கூடாது என்று தமிழக முதல்வர் உத்தரவிட்ட போதும் வடமதுரை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் பல லட்ச ரூபாய் கையூட்டு பெற்றுள்ளார். மாவட்ட ஆட்சியரால் பணி மாறுதல் ஆணை பிறப்பித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அதை மதிக்காமல் பணி செய்து பல லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே இவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு கையூட்டு பெறுவதற்கு உதவி ஆக இருந்த ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் என்பவரையும் மற்ற நபர்களையும் கண்டறிந்து அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் கையூட்டாக பெற்ற தொகையை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமதுரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். தொடர்ந்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.
Next Story

