திட்டச்சேரி அரசு பள்ளியில் பீச் வாலிபால் போட்டி: மாணவர்கள் தேர்வு

திட்டச்சேரி அரசு பள்ளியில் பீச் வாலிபால் போட்டி: மாணவர்கள் தேர்வு

வாலிபால் போட்டிக்கு தேர்வான மாணவர்கள்

நாகை மாவட்டம்திட்டச்சேரி அரசு பள்ளியில் பீச் வாலிபால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம்திட்டச்சேரி அரசு பள்ளியில் பீச் வாலிபால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தவும்,

பள்ளி மாணவர்களுக்கு பீச் வாலிபால் விளையாட்டை ஊக்கப்படுத்தவும் மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது.இதில் ராம்நாடு,திருப்பூர்,திருவண்ணாமலை,கும்பகோணம்,மயிலாடுதுறை நாகப்பட்டினம்,காரைக்கால் பகுதிகளை சேர்ந்த சுமார் 35 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் வாலிபால் பயிற்சியாளர்கள் முகமது தௌபிக்,மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர்.இதில் 6-ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story