பண்ணாரி அருகே கரடி நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்

பண்ணாரி கோவில் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரடி நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, கரடி மான்,யானை,காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன இந்த வன விலங்குகள் உணவுக்காக, குடிநீர் தேடி அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறுவது வழக்கம்.

இந்த நிலையில் பண்ணாரி கோவில் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனுர் பிரிவில் கரடி ஒன்று சாலை ஓரமாக நடமாடியாது இதை கண்ட வாகன ஒட்டிகள் வாகன ஓட்டி கள், கரடியை வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ, பரவலாக வைரலாகி வருகிறது.மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பாதுகாப்போடு செல்ல வனத்துறையினர் அறிவித்து வருகின்றனர் ஓட்டிகள் சாலையின் இரு புறமும், ஏதேனும்,வனவிலங்குகள் சாலை யை கடக்கிறதா? என பார்த்து செல்லும் படி, வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story