நாமக்கலில் தொழில் முனைவோர் ஆகலாம் கருத்தரங்கம்

நாமக்கலில் தொழில் முனைவோர் ஆகலாம் கருத்தரங்கம்

கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாமக்கலில் தொழில் முனைவோர் ஆகலாம் கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓரு பகுதியாக தமிழக அரசின் பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 'பட்டுப்பூச்சி வளர்ப்பிலும் தொழில் முனைவோர் ஆகலாம் ' என்றத் தலைப்பிலான பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் இத்துறை விஞ்ஞானி என். தாஹிரா பீவி மற்றும் இத்துறை உதவி இயக்குநர் ஏ.பழனிசாமி ஆகியோர் இத்துறை குறிக்கோள் குறித்து பேசினர். கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர்.லட்சுமிநாராயணன்,

இயக்குநர் உயர்கல்வி அரசு பரமேசுவரன், வணிகவியல் துறைத் தலைவர் எம் சசிகலா ஆகியோர் பேசினர். இந்நிகழ்வை பட்டுவளர்ச்சித் துறை, கல்லூரி வணிகவியல் துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், கல்லூரி புதுமை மையம் &உன்னத பாரத அபியான் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story