தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிஎட், எம்.எட்., நேரடிச்சேர்க்கை

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிஎட், எம்.எட்., நேரடிச்சேர்க்கை

தமிழ்ப் பல்கலைக்கழகம் 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (B.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (M.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பிற்கு 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 31 ஆகும். சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கைக்கு ஒருசில இடங்களே எஞ்சி உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளமான www.tamiluniversity.ac.in என்ற முகவரியிலும், 04362-226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் பதிவாளர் (பொறுப்பு) சி.தியாகராஜன் தெரிவித்தார்.

Tags

Next Story