காரைக்குடியில் பிச்சைக்காரர் அடித்து கொலை
காவல் நிலையம்
காரைக்குடியில் தொழில் போட்டி காரணமாக பிச்சைக்காரரை அடித்து கொன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தியேட்டர் அருகே பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு கேமரா அடிப்படையில் பூமிநாதன் என்பவரை விசாரணை செய்தனர்.
விசாரணையில் பூமிநாதனின் மனைவி பாகம்பிரியாள் என்பவருக்கும் இறந்த நபரான மூர்த்திக்கும் பிச்சை எடுப்பதில் தகராறு இருந்தது தெரியவந்தது.
இதனால் பூமிநாதன், நாராயணன் மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மூர்த்தி துாங்கும்போது கல்லால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Next Story