காந்திசிலைக்கு கீழே கவர்னரே வெளியே போ வாசகம் - திருப்பூரில் பரபரப்பு

காந்தி சிலைக்கு கீழே கவர்னர் குறித்த வாசகம்

கடந்த சில வாரங்களாகவே தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. திமுக மட்டுமல்லாமல் திமுக கூட்டணி கட்சிகளும் ஆளுநரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு வெளிப்புறமாக உள்ள சுவரில் வெளியே போ ரவி கவர்னர் எனக் கருப்பு எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவறுதலாக வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தாலும் அதில் ரவி கவர்னர் என எழுதப்பட்டிருப்பதால் குடிபோதையில் யாரேனும் எழுதினார்களா ? அல்லது அரசியல் உள்நோக்கத்தோடு எழுதப்பட்டதா ? என குழப்பம் ஏற்பட்டுள்ளது.


