பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம்

பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம்

தேரோட்டம்

பேரையூர் நாகநாதசுவாமி பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமயம் அருகே உள்ள பேரையூர் நாகநாதசுவாமி பிரகதாம்பாள் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் நாகநாதர் சுவாமி எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர் முத்துராமன், கிராம தலைவர்கள் ராமன், சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் விஜயா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில் பேரையூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை திருக்கோயில்கள் மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story