பெசன்ட் நகர் விபத்து வழக்கு - ஆந்திர எம்பி மகள் மீது வழக்கு பதிவு !

பெசன்ட் நகர் விபத்து வழக்கு - ஆந்திர எம்பி மகள் மீது வழக்கு பதிவு !

ஆந்திர எம்பி மகள் 

ஆந்திர எம்பி மகள் நேற்று இரவு தாறுமாறாக காரை ஓட்டி பெயிண்டர் ஒருவர் மீது ஏற்றியதால் அவர் உயிரிழந்தார் தற்போது அவர் மீது மேலும் பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் பெறப்பட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்த சம்பவம். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநிலம் ஒய.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பி பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதிரி என்பது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆந்திரா எம் பி யின் மகள் பீடா மாதிரி கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 304 (a) விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற சட்டப்பிரிவில் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 279 அதிவேக பயணம், 337 மற்றவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் படியான செயல் என்ற பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்பி பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரியின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பீடா மாதுரி சென்னை ஈசிஆரில் பிஎம்ஆர் ஏரியா ரெசிடென்ஸ் உட்பட இரண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். பீடா மாதுரி மீது பதிவு செய்த மூன்று சட்டப் பிரிவுகளும் காவல் நிலைய பிணையில் வரக்கூடியவை என்பதால் விடுவிப்பு என காவல் துறையினர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

Tags

Next Story