சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்வி நிறுவன விருது

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்வி நிறுவன விருது
X

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்வி நிறுவன விருது

மராட்டிய மாநிலம் ஜபர்பூரில் 38-வது இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் கவுன்சில் சார்பில் தேசிய அளவிலான பொறியியல் கல்வி நிறுவனத்திற்கு விருது வழங்கும் விழாவில் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்வி நிறுவன விருது வழங்கப்பட்டது
மராட்டிய மாநிலம் ஜபர்பூரில் 38-வது இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் கவுன்சில் சார்பில் தேசிய அளவிலான பொறியியல் கல்வி நிறுவனத்திற்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில், சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம் என்ற பிரிவின் கீழ் ஐ.இ.ஐ. பொறியியல் கல்வி சிறப்பு விருது (தங்கம்) வழங்கப்பட்டது. இந்த விருதை மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரி எ.ஆர்.ராஜேந்திர சுக்லா, இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியர்ஸ் (இந்தியா) தலைவர் சிவானந்த்ராய், உ.பி.எலக்ட் தலைவர் டாக்டர் ரங்கநாத், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிங் ஆகியோர் வழங்கினர். அதனை சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, முதல்வர் செந்தில்குமார், சிவில் என்ஜினீயரிங் துறையின் தலைவர் மாலதி மற்றும் சேலம் சென்டர் ஐ.ஈ.சேர்மன் தங்கராஜ் உள்பட பேராசிரியர்கள் பெற்றுக்கொண்டனர். பொறியியல் கல்வி துறையின் மாறும் பரிணாமம், கல்வியியல் மட்டுமின்றி ஆராய்ச்சி மேம்பாடு, ஆலோசனை, காப்புரிமைகள், வெளியீடுகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், புதிய கல்வி கொள்கையின் ஒருங்கிணைப்பு போன்ற துறைகளில் சிறந்த விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story