சிறந்த பள்ளிக்கான விருது: தலைமை ஆசிரியரை பாராட்டிய அதிகாரிகள்

சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பாராட்டு.

மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், தன்னார்வலர்கள் மூலம் ஏழை குழந்தைகளுக்கு உதவுதல் உள்ளிட்டவத்திற்காக அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் கேடயத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இதில் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், காலை உணவுத் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்துதல், தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வில் அதிகமான மாணவர்களை வெற்றி பெறச் செய்தல், விளையாட்டுப் போட்டிகள், கலை திருவிழாவில் மாணவர்களை மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற வைத்தல், தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்புற செயல்படுத்துவதுடன் அதனைச் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது,

தன்னார்வலர்கள் மூலம் ஏழை குழந்தைகளுக்கு உதவுதல் என அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூ. சாகுல் அமீது மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் சுமதி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார் மற்றும் பாண்டித்துரை, பள்ளியின் ஆசிரியர் சகிலா பானு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story