கடத்தூரில் வெற்றிலை விலை சரிவு

கடத்தூர் வெற்றிலை சந்தையில் வெற்றிலை விலை ஒரு மூட்டைக்கு 2000 ரூபாய் வரை குறைந்து விற்பனையானது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில், வாராந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிலை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதி சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை விற்க மற்றும் வாங்க வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் ஒரு மூட்டை வெற்றிலை 128 கட்டுகளைக் கொண்டது.

இதன் ஆரம்ப விலை 16 ஆயிரம் முதல் அதிகபட் சம் 19 ஆயிரம் வரை விற்பனையானது.நேற்று நடந்த சந்தையில் ஆரம்ப விலை 10 ஆயிரம் முதல் அதிக பட்சம் 17,000ஆயிரத்துக்கு விற்பனையானது.கடந்த வாரத்தை காட்டிலும் 2000 ரூபாய் விலை குறைந்தது. 20க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்பனையானது. ஒரே நாளில் 3.45 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story