வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது பிரசித்தம்.தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை வாங்க மற்றும் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இந்த வகையில் நேற்று கூடிய வெற்றிலை வார சந்தையில் 128 கட்டுக்களை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 10,000 ரூபாய் முதல் தரத்திற்கும் மற்றும் ரகத்திற்கும் தகுந்தாற்போல் 21,000 வரை விற்பனை செய்யப்பட்டது மேலும் நேற்று ஒரே நாளில் 4. 20 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் தற்போது கோடை காலம் நடைபெற்று வருவதால் வெற்றிலை மகசூல் பாதிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் வெற்றிகளின் அளவு குறைந்துள்ளதால் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.