பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயில் ஆனி பெருந்திருவிழா துவக்கம்

பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயில் ஆனி பெருந்திருவிழா துவக்கம்

ஆனி திருவிழா 

பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயில் ஆனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயில் ஆனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காயல்குடி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த பெத்தவநல்லூர் அஞ்சல் நாயகி உடனுறை ஶ்ரீ மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது.

இங்கு ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அஞ்சல்நாயகி உடனுறை மாயூர்நாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, விளைந்த நெற்கதிர்கள், தர்ப்பைபுல், மா இலை தோரணங்கள் கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 7ம் நாள் விழாவான ஜூன் 19ம் தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும், 9ம் நாளான 21ம் தேதி ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டமும் நடைபெற உள்ளது . விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story