விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல்

விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல்

பைல் படம் 

நீலகிரியில்  பட்டாணி, பீன்ஸ் விதைகளை விதை நேர்த்தி செய்து பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என விதை பரிசோதனை நிலையம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் ஊட்டி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் நவீன் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- நீலகிரி மாவட்டத்தில் பிரதானமாக பயிரிடப்படும் பயறு வகைப் பயிர்களான பட்டாணி மற்றும் பீன்ஸ் விதைகளை விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி விதைகளின் தரத்தை உயர்த்தி அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விதை நேர்த்தி மூலம் தரமான விதைகள் கிடைப்பதால் வயல்களில் விதைக்கும் விதையின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டு இடுபொருட்கள் செலவை குறைக்கலாம். பட்டாணி மற்றும் பீன்ஸ் விதைகளை தண்ணீரை கொண்டு இரு முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம்.

முதலாவதாக விதைகளை நீரில் 8 முதல் 12 மணி நேரம் ஊற வைப்பதன் மூலம் விதையின் உடலியல் காரணிகள் தூண்டப்பட்டு முளைப்பு திறன் வேகம் எடுத்து அனைத்து விதைகளும் சீராக முளைப்பது உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவதாக 55 டிகிரி செல்சியல் வெப்பம் உள்ள நீரில் 20 முதல் 30 நிமிடம் விதைகளை ஊற வைப்பதால் விதைகளின் மேல்பரப்பிலும் விதை தோலின் அடியிலும் இருக்கும் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு விதைமூலம் பரவக்கூடிய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் விதை நேர்த்தி செய்யும் போது நீரின் வெப்பம் 55 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் அதிக வெப்பத்தின் காரணமாக விதைகள் சேதமடைந்து முளைப்பு திறன் பாதிக்கப்படும்.

ரசாயண விதை நேர்த்தி - பட்டாணி மற்றும் பீன்ஸ் விதைகளுக்கு கிலோவிற்கு 2 கிராம் என்ற விகிதத்தில் திரம் அல்லது கேப்டான் பூஞ்சாணகொல்லியுடன் நன்றாக கலந்து உலரவிட்டு விதைப்பதன் மூலம் 30 முதல் 40 நாட்கள் வரை பூங்சாணத்தினால் ஏற்படும் நோய்கள் கட்டுபடுத்தப்படுகின்றன. உயிரியல் சார்ந்த விதை நேர்த்தி - உயிரியல் கட்டுபாட்டு காரணிகளான டிரைகோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் ப்லோரசன்ஸ் அல்லது பேசிலஸ் சப்டிலீஸ் ஆகியவற்ைற ஒரு கிலோ விதைக்கு தலா 4 கிராம் வீதம் நன்றாக கலந்து விதைப்பதால் பயிர்களை தாக்க கூடிய நோய்களை நீண்டகாலம் கட்டுபடுத்தலாம். மேலும் உயிர் உரமான ரைசோபியத்தை 1 ஹெக்டர் விதைக்கு 600 கிராம் என்ற வீதம் வடிகட்டி ஆர வைத்த கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம் யூரியா இடுவதை குறை்து மகசூலை பெருக்கலாம். குறிப்பாக உயிரியல் நேர்த்தி செய்த விதைகளுக்கு ரசாயண விதை நேர்த்தி செய்ய கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story