பகவதி அம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி விழா 23ஆம் தேதி 

பகவதி அம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி விழா 23ஆம் தேதி 

சித்ரா பௌர்ணமி விழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி விழா வரும் 23 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. பின்னர் பத்து மணிக்கு பல்வேறு அபிஷேகங்களும், 11:30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிபல்லக்கில் எழுந்தருள செய்து, கோவிலில் உட்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க மூன்று முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமர செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து அத்தாழ பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story