பக்தவச்சல பெருமாள் சித்திரை தேர் திருவிழா
தேர் திருவிழா
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வைணவ ஆலயங்களில் 108 திவ்ய தேசங்களில் 16வதாக விளங்கும் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேக வள்ளி சமேத ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் திரு தேரோட்டம் நடைபெற்றது . இதனை ஒட்டி ஸ்ரீதேவி பூமிதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாருடன் பெருமாள் கல்யாண கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருள செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டது.
Next Story