கருங்கல் : மாவட்ட அளவில் பரதநாட்டிய போட்டி
மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்
மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு கருங்கல் ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியும் , இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து நடத்திய கன்னியாகுமரி மாவட்ட அளவிலான பரதநாட்டிய போட்டி நடைபெற்றது. ஒரு பகல் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டியை பரதநாட்டிய ஆசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர். டாக்டர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமை தாங்கினார். எழுத்தாளர் சிவனி சதீஷ் அனைவரையும் வரவேற்றார் . தக்கலை சந்திரன் லயன் ஓய். எஸ். லெனின், டாக்டர் எஸ். எ.சஜீஷ் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஜே. ஹென்சிலின் கவிதா விழா அறிமுக உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி விருது பெற்ற விஞ்ஞானி ஜி. அருள் ஜெரால்டு பிரகாஷ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தொழிலதிபர் பி. பி. கே. சிந்துகுமார் டாக்டர் சில்வர் சுரேஷ் , டாக்டர் சுபத்ரா செல்லத்துரை, டாக்டர் எஸ். ஜெயா ஸ்ரீதரன் , டாக்டர் பி. முருகேசன் , மாஸ்டர் ஜெயகர்ணன், எழுத்தாளர் விபின் அலெக்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ப.விஜயகுமாரி நன்றி உரை வழங்கினார். நூற்றுக்கு மேற்பட்ட பரத கலைஞர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்றனர்.
Next Story