நாமக்கல் கவிஞர் இல்லத்தில் பாரதியார், இராஜாஜி பிறந்தநாள் விழா ! மருத்துவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது ..

நாமக்கல் கவிஞர் இல்லத்தில்  பாரதியார், இராஜாஜி பிறந்தநாள் விழா ! மருத்துவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது ..

 பாரதியார், இராஜாஜி பிறந்தநாள் விழா 

நாமக்கல் கவிஞர் நினைவு உள்ள நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் மகாகவி பாரதியார், மூதறிஞர் இராஜாஜி பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நிகழ்வின் முதலில் மகாகவி பாரதியார் படத்திற்கும் மூதறிஞர் ராஜாஜி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். நூலக வாசகர் வட்டத் தலைவர் டி.எம் மோகன் அறிமுக உரை நிகழ்த்தினார். மனவளகலைமன்ற பேராசிரியர் உழவன் தங்கவேலு முன்னிலையுரையாற்றினார்.

நாமக்கல் தமிழ் சங்கத் தலைவர் மருத்துவர் குழந்தைவேல் விழாவுக்கு தலைமையேற்று விருதுகள் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

"மகாகவி பாரதியார் விருது" வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும்,

"மூதறிஞர் இராஜாஜி விருது" தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட பொருளாளர் பழையபாளையம் சிவகுமார் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

தமிழ்ச்செம்மல் முனைவர் அரசு பரமேசுவரன் தலைமையில் "பாரெங்கும் பாரதி" என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் கந்தசாமி விடுதலை வேட்கை பாடல்கள் தலைப்பிலும், பேராசிரியை பிரபா பெண்கள் முன்னேற்ற பாடல்கள் தலைப்பிலும், கவிஞர் சேந்தை செழியன் சமூக முன்னேற்ற பாடல்கள் தலைப்பிலும், கல்லூரி மாணவர் சக்திவேல் குழந்தைகள் பாடல்கள் தலைப்பிலும் பேசினார்கள். ஆசிரியர் தமிழ்ச்செல்வன் எழுதிய "கவிபாரதி" குழந்தைகள் பாடல்கள் நூல் வெளியிடப்பட்டது. வாசகர் வட்ட துணைத்தலைவர் அமல்ராஜ் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



நிகழ்வில் பழைய பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பபிள்ளை, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் குமார், துரைசாமி, சண்முகம், ரஃபி, ஜவகர், சுப்பிரமணியம், கிருஷ்ணகுமார், சரவணகுமார், ரவி, நடராஜன், ராமசாமி, பாலுசாமி, முருகன், மருதமுத்து, திருப்பதி, வெங்கடேசன், புலவர் தங்கவேல், ஆசிரியை கண்ணகி, மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை அமைப்புச் செயலாளர் யுவராஜா கோபால்சாமி நிகழ்வை தொகுத்து வழங்கினார். இறுதியில் நாமக்கல் கவிஞர் நினைவு நூலக வாசகர் வட்ட பொருளாளர் அன்புச்செல்வம் நன்றி கூறினார்.

Tags

Next Story