பாரதி ஜனதா கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்

X
பாஜக மகளிரணி நிா்வாகிகள் கூட்டம்
தென்காசி மாவட்ட பாஜக மகளிரணி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
தென்காசியில் மாவட்ட பாஜக மகளிரணி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட மகளிரணி பொதுச் செயலா் மரகதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜலெட்சுமி, பாஜக மாவட்ட பொதுசெயலா் பாலகுருநாதன், தென்காசி நகரத் தலைவா் மந்திரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிரணி தேசிய செயற்குழு உறுப்பினா் அஸ்வினி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். தென்காசி அரசு மருத்துவமனையில் போதுமான மருந்து இருப்பையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளுடன், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மகளிா் இலவச பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story
