பாரதிய ஜனதா இளைஞரணி கூட்டம் ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு !

X
Union Minister VK Singh participated in the Bharatiya Janata Youth meeting
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் சார்பில் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் கோட்டாரில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் சார்பில் நேற்று இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் கோட்டாரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் சுஜன் ராஜ் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், - வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேர்தலுக்கான பணிகளை முழுமையுடன் மேற்கொள்ள வேண்டும். முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள் வாக்குகளை பாரதிய ஜனதா அதிகம் பெறும் வகையில் இளைஞர் அணியினர் செயல்பட வேண்டும், ஏழை மக்களுக்கு இளைஞரணி சார்பில் உதவிகள் வழங்க வேண்டும் என்று அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
