திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மனுவை தாக்கல்
திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஏ பி முருகானந்தம் உள் பனியன் அணிந்து வந்த தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர் திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்த அவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள் பனியன் அணிந்தபடியும் திருப்பூரின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நூல் மற்றும் ஜாமக்காளம் ஆகியவற்றை தட்டில் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த காலங்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கலுக்கும் , மத்திய அரசுக்கும் புரிந்துணர்வு இல்லாததன் காரணமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் , தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கு மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் , அதே நேரத்தில் திருப்பூரில் பிரதான கோரிக்கையான நூல் விலையை கட்டுப்படுத்த நூல் உற்பத்தியை முறைப்படுத்தி நழிவடைந்த தொழில்களை மீட்டெடுக்க மூன்றாம் முறையாக மத்தியில் பொறுப்பேற்கும் மோடி தலைமையிலான அரசிடம் குரல் கொடுத்து பெற்று தருவோம் என்ன பேட்டி கொடுத்தார்.
மேலும் தமிழக அரசு பாஜகவை ஒடுக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கூட பாஜகவுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக குற்றம் சாட்டினார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர் .