பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து ஆர்பாட்டம் !

பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து ஆர்பாட்டம் !

பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி பயத்தால் ரூபாய்1823 கோடி வரி விதித்து காங்கிரஸ் கட்சியை முடக்க பார்க்கும் ஆர். எஸ். எஸ் பின்புலனாக செயல்படும் மத்தியில் ஆளும் பாசிச பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி பயத்தால் ரூபாய்1823 கோடி வரி விதித்து காங்கிரஸ் கட்சியை முடக்க பார்க்கும் ஆர். எஸ். எஸ் பின்புலனாக செயல்படும் மத்தியில் ஆளும் பாசிச பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூரத்தி தலைமையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மோடி அரசு காங்கிரஸ் கட்சியை தேர்தல் நேரத்தில் முழுமையா முடக்க நினைப்பதாகவும், பத்து ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சி மக்களை ஏமாற்றியதாகவும், நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகளை பேச அனுமதிப்தாகவும், வருமான வரிதுறையை மத்திய அரசு ஏவல்துறையாக பயன்படுத்தி வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story