மண்டைக்காடு கோவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி

மண்டைக்காடு கோவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி
X
அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி
குமரி மாவட்டம், மண்டைக்காடு கோவில் மாசி திருவிழா மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு வெள்ளி பல்லக்கில் பவனி நடைபெற்றது.

குமரி மாவட்டம், மண்டைக்காடு கோவில் மாசி திருவிழா கடந்த 3-ம் தேதி திரு கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாளான நேற்று அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் தங்க தேர் பவனி தொடர்ந்து, கீழ்க்கரை பிடாகை கோவிலிலிருந்து சந்தனக் குடம் பவனி மண்டைக்காடு கோவிலில் வந்தடைந்தது.

தொடர்ந்து சாய்ரட்சைபூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை, 9. 30க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று செவ்வாய்க்கிழமை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெண்கள் கூட்டமாக பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story