சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி விழா

குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலில் நடந்த பீஷ்ம ஏகாதசி குங்குமார்ச்சனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவில் பீஷ்ம ஏகாதசி விழா முன் தினம் தொடங்கியது. விழாவையொட்டி சூடிக்கொடுத்த சுடர்கொடியாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுடர்கொடியாள் சூடிக்கொடுத்த மாலை திருவீதி உலா மற்றும் மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை அழைப்பும் நடைபெற்றது.

விழாவின் பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்க கவச அலங்கார சேவை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கணபதி, அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் நவகோள்கள் பூஜை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு திருபாவாட சேவை நடைபெற்றது.

இந்த வழிபாட்டின் போது இனிப்பு மற்றும் பலகாரங்களைக் கொண்டு அன்னத்தால் சாமி அலங்கார சேவை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், ராம நவமி விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story