திருப்பத்தூரில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை

திருப்பத்தூரில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை

பூமி பூஜை 

திருப்பத்தூரில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையாய் அமைச்சர் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட, நாகப்பா மருதப்பா அரசு மகளி்ர் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜையினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்து தெரிவிக்கையில், முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும், அரசின் அனைத்து துறைகளும் கூடுதலாக முன்னேற்றம் பெற்றிடும் வகையில், சிறப்பான நிர்வாகத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். அதில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவைகளை தனது இரு கண்களாக கொண்டு, பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டும், இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் அழியா செல்வமான கல்வியினை நிரம்ப பெற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து, மாணாக்கர்களை பயன்பெற செய்து வருகிறார்கள்.

அதன்படி இன்றைய தினம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.338.88 இலட்சம் மதிப்பீட்டில் 16 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட மாத கால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பேசினார்

Tags

Next Story