நியாய விலை கடை கட்ட பூமி பூஜை - எம்பி துவக்கி வைப்பு
பூமி பூஜை
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரனாரை 16 மற்றும் 17வது வார்டு பகுதியில் புதிதாக நியாய விலை கடை கட்டுவதற்காக, பெரம்பலூர் பாராளுமன்ற , தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் டிசம்பர் - 16ம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது, இந்நிகழ்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் கலந்து கொண்டு கட்டுமான பணி தொடங்கி வைத்தார், இந்நிகழ்ச்சியின் போது இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் 17வது திமுக வார்டு உறுப்பினர் துரை காமராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story