ஆத்தூர் ஊராட்சியில் சிமெண்ட் காங்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
பூஜையில் கலந்து கொண்டவர்கள்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூலமேடு, கல்லாநத்தம், மல்லியகரை, அம்மம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.180.00 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம், கதிர் அடிக்கும் களம், சிமெண்ட் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியினை ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்சினி அவர்கள் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர். செழியன், ஒன்றிய பொறியாளர் ஜெயந்தி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் நல்லம்மாள், மீனா வெற்றிவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரி வீராசாமி, சேகர், ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கனிமொழி ஜோதி, சூடாமணி வெங்கடேஸ்வரன், வெள்ளையம்மாள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கல்லாநத்தம் ராஜேந்திரன்,
முத்துசாமி, மனோகரன், மாதேஸ்வரன், ஆனந்தன், கூலமேடு சோலைமுத்து, குணசேகரன், ராஜா, ரங்கசாமி, துரைக்கண்ணன்,சுப்பையா மல்லியகரை அரியமுத்து, ராஜா, பெரியசாமி, வரதராஜன், ராமசாமி, பச்சமுத்து, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.