சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை

சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை

பள்ளிபாளையம் நகராட்சி ஜீவா செட் பகுதியில் சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் நடைபெற்றது.

பள்ளிபாளையம் நகராட்சி ஜீவா செட் பகுதியில் சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஜீவா செட் பகுதியில், 15வது நிதி குழு சுகாதார மானியம் 2023,2024 சார்பில், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட வெடியரசம்பாளையம் சாலை ஜீவா செட் பகுதியில், புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நகரமன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர்மன்ற துணை தலைவர் பாலமுருகன், மற்றும் நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூமி பூஜை நிகழ்வை திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எம். மதுரா செந்தில் அவர்கள் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் திமுக நகர செயலாளர் குமார்,நகர அவ தலைவர் குலோப்ஜான், வார்டு நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story