மேட்டூரில் புதிய நியாய விலை கடை கட்ட பூமி பூஜை !

மேட்டூரில் புதிய நியாய விலை கடை கட்ட பூமி பூஜை  !

பூமி பூஜை

சேலம் மாவட்டம், மேட்டூரில் புதிய நியாய விலை கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம், சவுரியூர் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதி 10.50 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.இப்பணியினை அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் 2-வது வார்டு பாலாஜி நகரில் 2.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜலகண்டாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் ,மேற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல், பேரூர் செயலாளர் சிவக்குமார், நங்கவள்ளி சேர்மன் பானுமதி பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story