பரமத்தி வேலூர் அருகே தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

X
பரமத்தி வேலூர் தார் சாலை மேம்பாட்டு பணிகான பூமிபூஜையை தொடங்கி வைக்கும் அமைச்சர் ம.மதிவேந்தன்
பரமத்தி வேலூர் தார் சாலை மேம்பாட்டு பணிகான பூமிபூஜையை தொடங்கி வைக்கும் அமைச்சர் ம.மதிவேந்தன்
பரமத்தி வேலூர் பேரூராட்சி மற்றும் ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் ரூ.3.08 கோடி மதிப்பிலான தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் புதிதாக கட்டப்பட்ட சந்தை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் பேரூராட்சி, படமுமடிபாளையம், வார்டு எண் 1-ல் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் படமுடிபாளையம் தேசிய நெடுஞ்சாலை முதல் ஆரியூரான் தோட்டம் மற்றும் தங்காயி கோயில் வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.விழாவிற்கு நாமக்கல் ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமை வகித்தார். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் மருத்துவர் ம.மதிவேந்தன் பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மேலும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வடகையாத்தூர் ஊராட்சி, ஜேடர்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.49.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சந்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி, செயல் அலுவலர் திருநாவுகரசு,அரசு வழக்கறிஞர்கள் செந்தில்,பாலகிருஷ்ணனும், வடகரையாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடகரையாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா மற்றும் கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story
