ஓசூர் அருகே வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள்
ஓசூர் அருகே தளி சட்டமன்றத் தொகுதியில் ரூ.56 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தாவரக்கரை ஊராட்சியில் ஒசட்டி கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ.2 இலட்சம் மதிப்பில் பைப்லைன் அமைக்கும் பணி, மலசோனை கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணி. ரூ.5.5 இலட்சம் மதிப்பில் போர்வெல் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணி. கண்டகானப்பள்ளி ஊராட்சியில் எலசெட்டி கிராமத்தில் ரூ.2.5 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ரூ.2.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
பாப்பிரெட்டிபாளையம் கிராமத்தில் ரூ.3.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, வரதரெட்டிபாளையம் கிராமத்தில் ரூ.3.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி. கோட்டைஉலிமங்கலம் ஊராட்சியில் சாமநஞ்சபாளையம் கிராமத்தில் ரூ.4.5 இலட்சம் சிமெண்ட் சாலை மற்றும் ரூ.5 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி,
கோட்டைஉலிமங்கலம் கிராமத்தில் ரூ.7 இலட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் ரூ.10 இலட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணி. ஆகிய பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.