நூலக கட்டிடத்திற்கு பூமி பூஜை

X
சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிய நூலகம் கட்ட பூமிபூஜையை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி சந்தைப்பேட்ைட அருகே உள்ள நூலகம் பழுதடைந்த நிலையில் செயல்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.22 லட்சத்தில் புதிய நூலகம் கட்ட பூமிபூஜை நடைெபற்றது. சேலம் மேற்கு அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவா் சாரதா ராஜா, துணைத்தலைவர் சக்தி, வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் காமராஜ், ஒன்றிய தலைவர் சம்பத், குணசேகரன், மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, மோகன்ராஜ், ஏ.டி.சி. பிரகாசம், டைலா் கண்ணன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன், கவுன்சிலர்கள் செல்வராஜ், ரஞ்சித்குமார் கலந்து கொண்டனர்.
Next Story
