புதிய நியாய விலைக் கடைக்கு பூமி பூஜை

புதிய நியாய விலைக் கடைக்கு பூமி பூஜை
பூமி பூஜை
தென்காசி நகராட்சியில் ரூ.13 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி 12-ஆவது வாா்டு பகுதியில் ரூ.13 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவில் பழனிநாடாா் எம்எல்ஏ, திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனா். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா் பூமாதேவி, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் வெங்டேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story