சாலைகள் உட்கட்டமைப்பு பணிக்கான பூமி பூஜை

சாலைகள் உட்கட்டமைப்பு பணிக்கான பூமி பூஜை

பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்கான பூமி பூஜையை செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி சேடர்பாளையத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் மங்களம் சாலை முதல் சேடர்பாளையம் வழியாக அருள்புரம் செல்லும் சாலை வரை ஒரு வழிச்சாலையில் இருந்து இடைவழிச் சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

உடன் பல்லடம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சரவணன்,பொறியாளர் ராஜேஷ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story