தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

சேங்கல் ஊராட்சியில் ரூ 14.50 லட்சம் மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது; எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி பணியை துவக்கி வைத்தார்.

ரூ. 15.40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. எம் எல் ஏ சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சேங்கல் ஊராட்சியில், சேங்கல் மாணிக்கபுரம் சாலை முதல் மாணிக்காபுரம் வரை ரூபாய் 14.50- லட்சம் மதிப்பீட்டில்,, தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மாணிக்காபுரம் பகுதியில் உள்ள சுக்காம்பட்டி புதூரில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

பூமி பூஜை விழாவில் பங்கேற்க வந்த எம்எல்ஏ சிவகாமசுந்தரிக்கு கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, மாவட்ட பிரதிநிதி சிவகுமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உஷா சிவக்குமார், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் நல்லசாமி, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story