தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

பூமி பூஜை 

திருச்செங்கோடு நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மண்சாலையினை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் - மாங்குட்டைப்பாளையம் செல்லும் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மண்சாலையினை தார் சாலையாக அமைக்கும் பணிக்கு திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம் மதுரா செந்தில் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இப்பூஜையில் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,நகராட்சி ஆணையாளர் சேகர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், SP. ரவிக்குமார்,WT. ராஜா ,செல்விராஜவேல், தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முகவடிவு, செல்லம்மாள் தேவராஜன், சுரேஷ்குமார் முருகேசன், மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story