மேட்டூரில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

மேட்டூரில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

மேட்டூர் அருகே மேச்சேரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

மேட்டூர் அருகே மேச்சேரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரி குள்ளமுடையானூர் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 13.50 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டுதல், விருதாசம்பட்டி ஊராட்சி, கந்தனுர் காட்டுவளவு பகுதியில் 9.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுதல், பொட்டனேரி பேருந்து நிறுத்தத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழல் கூடை கட்டுதல் ஆகிய பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

இப்பணிகளை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .சதாசிவம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க, செயலாளர் ராஜசேகரன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மேச்சேரி மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story