திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை !
பூமி பூஜை
திருப்பூர் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ஆரத்தொழுவு ஊராட்சி தேவனம்பாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி உள்ளார்.
Next Story