வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை எம் எல் ஏ ராமச்சந்திரன் பங்கேற்பு

கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தன. இதனால் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை செய்தனர். இதில் எம் எல் ஏ ராமச்சந்திரன் பங்கேற்றார்.
வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை எம் எல் ஏ ராமச்சந்திரன் பங்கேற்பு தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தன நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ. 10கோடி 40 இலட்சம் மதிப்பில் அந்த பழுதடைந்த பாலங்களை புதுப்பிக்கும் பணி மற்றும் இருவழி சாலை அமைக்கும் பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அனுசோனை - பாலேகுளி சாலையில் காலேப்பள்ளி கிராமத்தில் ரூ. 2. 60 கோடி மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல், தேன்கனிக்கோட்டை,மதகொண்டப்பள்ளி சாலையில் பேளூர் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல். அந்தேவனப்பள்ளி சாலிவாரம் சாலை ராமச்சந்திரம் வழியில் கொங்குசெட்டிப்பள்ளி கிராமம் அருகில் ரூ. 3 கோடி 10 இலட்சம் மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல். அந்தேவனப்பள்ளி சாலிவாரம் சாலை ராமச்சந்திரம் வழியில் வெங்கடாபுரம் கிராமம் அருகில் ரூ. 1 கோடி 20 இலட்சம் மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் உதவி பொறியாளர் நெடுஞ்சாலை துறை, மாவட்ட கவுன்சிலர்கள் பூதட்டியப்பா, பழனி, ஒப்பந்ததாரர் சிவகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story